History

Gallery

Calendarசிறப்புரை

 

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் சிறப்புப் பெறும்.அதுபோல் ஸ்ரீபாண்டுரங்க பெருமானை தரிசனம் செய்ய சிறந்த இடமாக கொமாரபாளையம் நகர் விட்டலபுரி சிறப்புப் பெற்றுள்ளது.ஸ்ரீ பாண்டுரங்க பெருமானின் திருவுருவப்படத்தை 1927 ல் பனைமரத்தில் ஆணியில் பொருத்தி,ஆடிப்பாடி பஜனை செய்து வந்த இடம் ஸ்ரீ பாண்டுரங்கர் திருக்கோவிலாக சிறந்து விளங்குகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சென்று திருமாலை தரிசித்து நாம் திருப்தி அடைவது போல,ஸ்ரீ பாண்டுரங்க பெருமானை கொமாரபாளையம் விட்டலபுரி ஸ்ரீ பாண்டுரங்கர் திருக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தால் போதும். நம் மனம் குளிரும்.மகாராஷ்டிர மாநிலம் பண்டரிபுரம் செல்லாமலேயே ஸ்ரீ பாண்டுரங்க பெருமானை கொமாரபாளையத்தில் தரிசனம் செய்ய,சிறந்த திருத்தலத்தை அமைத்து அந்த இடத்திற்கு விட்டலபுரி என்று பெயர் சூட்டி சிறப்பித்து உள்ளார்கள்.

ஆரம்ப காலத்தில் பஜனை செய்து பாடிவந்தவர்கள் பண்டரிபுரத்திலுள்ளது போலவே மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து திருப்பணி முடிக்க அரும்பாடுபட்டு 1945 ல் கோயிலை கட்டி கும்பாபிசேகம் முடித்து சிறப்பித்துள்ளார்கள்.‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’என்ற பெருநோக்கம் ஈடேற,கொமாரபாளையத்தில் ஸ்ரீ பாண்டுரங்கர் திருக்கோவிலை கட்டி,தென்னாட்டு பக்தர்கள் எளிதில் ஸ்ரீ பாண்டுரங்க பெருமானை தரிசிக்க வழி வகுத்துள்ளார்கள்.

பண்டரிபுரத்திலுள்ள மூர்த்திகளை போலவே ஸ்ரீ பாண்டுரங்கபெருமான்,ஸ்ரீ விட்டோப மூலவ மூர்த்திகளை அங்கிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்துள்ளார்கள். மூலவ மூர்த்திகளை அருகில் நின்று தொட்டு தரிசனம் செய்வது தனிச்சிறப்புடையது.மற்ற ஆலயங்களில் இதுபோன்ற தரிசனத்திற்கு வழிமுறை இல்லை.மேலும் இத்திருத்தலத்தில் ஸ்ரீ சயன ஏகாதசி,ஸ்ரீ பந்த சேவை,ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி போன்ற உற்சவங்கள் வெகுவிமர்சையாகவும், ஜனரஞ்சிதமாகவும் கொண்டாடப்படும்.

ஸ்ரீ பாண்டுரங்கரின் பரம பக்தையான ஸ்ரீ சந்த்த மீராபாய் அம்மையார் அவர்கள் தமது கோஷ்டிகளுடன் 1950 ல் திருக்கோயிலுக்கு எழுந்தருளி பேரானந்தமாக ஆடிப்பாடி சிறப்பித்துள்ளார்கள்.உயர்திரு வேதாந்த சிரோமணி குருமகராஜ் ஸ்ரீ அபேதானந்த சுவாமிகள் தேவஸ்தானத்திற்கு வருகை தந்து சிறப்பித்துள்ளார்.கோவை மாவட்டம் கோபி சரகம் காவல்துறையைச் சார்ந்த திரு துரைசாமி முதலியார் நேரம் கிடைத்தபோதெல்லாம் இரவு பகல் பாராமல் திருக்கோயிலுக்கு வந்து நாமசங்கீர்தனங்கள் பாடி ஆடி மகிழ்ந்து சிறப்பித்துள்ளார்கள்.

மற்றொரு சமயம் ஆந்திரா மாநிலம் காளஹஸ்த்தி மகான் ஸ்ரீ பண்டரிசாமி அவர்கள் இத்திருக்கோயிலுக்கு எழுந்தருளி தங்கி நாமசங்கீர்த்தனங்கள் பாடியும் சிறப்பித்துள்ளார்கள். நமது நாட்டின் தென்பகுதி பக்த்தர்களும் பொது மக்களும் இங்கு வந்து ஸ்ரீ விட்டோபா சமேத ஸ்ரீ பாண்டுரங்கரை தரிசித்து பகவானின் திருவருளைப் பெறுவதற்கு புகழ் பெற்ற புண்ணியஸ்தலமாக ஸ்ரீ பாண்டுரங்கர் திருக்கோயில் திகழ்கிறது.

ஸ்ரீ பாண்டுரங்கரின் பால் ஐக்கியப்பட்டு நாம் சங்கீர்த்தனங்களை பாடி அருள் பெருவோமாக.

வாழ்த்து உரை

சந்து சித்து ஆனந்த்தம் நித்தியம் புராணமாய் விளங்கும் பரப்பிரம்ம சொரூபமானது,அனிர்வசனீய மாயயின் காரியமான இப்பிரபஞ்சத்தில், நமரூபங்கள் மூலமாக ஆங்கு ஆங்கு வெளிப்பட்டுத் தம்மை வழிபடும் பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அருள் பாலிக்கின்றது. அப்படி அருள் பாலிக்கும் சேத்திரங்களிலே ஸ்ரீவைணவப் பெருமக்களால் மிகவும் போற்றப் படுவது,மகாராஷ்டிரத்திலுள்ள பண்டரீபுரமமும் ஒன்றாகும்.அந்தப் புனித இடமானது சந்திரபாக நதிக்கரையில் அமைந்துள்ளது.அதில் பரப்பிரம்ம சொரூபரான ஸ்ரீமந் நாராயணன்,பரமபக்தனான புண்டலீகன் வேண்டுகோளுக்கிணங்கி அருள் பாலிப்பதின் மூலம் தம் மகிமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.அப்பெருமான் நமது நாமக்கல் மாவட்டம் கொமாரபாளையம் (காட்டூர்) விட்டலபுரியிலிருந்து கொண்டு,தென்னாட்டு மக்களுக்கும் கிருபை செய்ய வேண்டுமென்று கருதி எடுத்துக்கொண்டு முயற்சியையும் , வளர்ச்சியையும் பற்றி விளக்கிக் கூறுவதே இந்நூலின் கருத்தாகும்.இதன்மூலம் ஸ்ரீ பாண்டுரங்கன் நன்கு அருள்புரிகின்றார் என்பதை அர்த்தாபத்தில் பிரமாணத்தால் அறிய முடிகிறது. பகவான் ஸ்ரீ பாண்டுரங்க நாதரின் அருளைப் பெற்ற முக்கியமானவர்களின் பெயர்களையும் இந்நூலில் காணலாம்.அவர்கள் மேலும் மேலும் அருளைப் பெறுவார்களாக.பொதுவாக எல்லா பக்தர்களும் ஸ்ரீ விட்டல் நாதரின் பேரருள் பெற்று நீடூழி வாழ்வார்களாக.இப் புனிதமான கோவிலின் நித்திய நைமித்தியப்பணிகள் சிறந்து வளரட்டும்,வாழட்டும்.பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறட்டும்,எங்கும் மங்கலம் பெருகட்டும். விட்டல் விட்டல் நாமம் சொல்லி நீளாயுள், நிறை செல்வம்,மெய்ஞானம்,உயர்புகழ் இவையாவும் ஒழுங்கி அமையப் பெற்று நீடூழி வாழ்வீராக……..

 சர்வம் விஷ்ணு மயம்

ஆதியும் அந்தமுமில்லாதவரும்,எங்கும் வியாபித்திருப்பவரும் எல்லா உலகங்களுக்கும் முதற்கடவுளும்,எல்லா உலகங்களையும் பிரத்யக்ஷமாக பார்ப்பவரும்,வேதங்களினால் உரைக்கப்படுகிரவரும்,எல்லா தர்மங்களையும் அறிந்தவரும் (தம்மைத்துதிக்கும்) உலகதோர்க்கு புகழைப் பெருகச் செய்பவரும் சகல ஜீவராசிகளின் இருப்புக்கு மூலாதாரமான வியாபித்திருப்பவரும்,தம்மை சேர்ந்தவரை பெருகும்படி ஸ்வரூபியாக விளங்குபவரும் பிரம்மா,சிவன்,இந்திராதி தேவர்க்கெல்லாம் அழிவற்ற பிதாவாக விளங்குபவரும்,எல்லா பொருள்களுக்கும் முடிவில் ஒடுங்குமிடமாக திகழ்பவரும்,ப்ரணவாகார ஸ்வரூபியாகவும், விளங்குபவருமாகிய ஸ்ரீயப் பதியாகிய ஸ்ரீமந் நாராயணனே என்பது வெள்ளிடை மலை.


”நம;ஸமஸ்த பூதா நாமாதி பூதாய பூப்ருதே

அநேக ரூப ரூபாய விஷ்ணவே பிரப்ஹ விஷ்ணவே”

எல்லா பூதங்களின் உற்பத்திக்கும் ஆதி பூதமாகவும் அநேக ரூபமாக அவதாரம் எடுத்தவருமான பரபிடம்ம ஸ்வரூபியான நாராயணணை நமஸ்கரிக்கிறேன் என விஷ்னு ஸகஸ்ர நாமத்தில் கூறப்படுகிறது. விஷ்ணு ஸர்வேசாம் அதிபதி : பரோலோகானும்

ஜிதோ ஜிதாத்மன பவதே பவாய’’.

என பாரமாத்மிக உபநிஷத்தில் விஷ்ணுவே எல்லாவற்றிற்கும் அதிபதி, ஜகத்ரக்ஷகனாகவும் இருக்கிறான் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஓம் பூர்ண்ம் அத : பூர்ண்ம் இதம்

பூர்ணாத் பூர்ண்ம் உசத்யதே

பூர்ணஸ்ய பூர்ண்ம் ஆதாய

பூர்ண்ம் ஏவா வசிஷ்யதே”

முழு முதற் கடவுள் குறைவற்றவர், முழுமையானவர், அவர் பரிபூர்ணமானவரா கையால் புறவுலகம் போன்று அவரினின்று வெளிப்படுவனலெல்லாம் குறைவற்ற முறையில் முழுப்பொருட்களாக அமைகின்றன, முழுப்பூர்ணத்திலிருந்து உற்பத்தியாவதெல்லாம் அதனதன் நிலையில் முழுமையானது. அவர் பூர்ண்மான முழுப்பொருளாகையால் அவரினின்று பற்பல முழுமையான பகுதிகள் வெளிவந்த்தும் அவர் முழுமையான மீதியாகவே எஞ்சி நிற்கிறார்.”பவித்ராணாம் பவித்ரம்யோ மங்களா நாம்ச மங்களம்!

தைவதம் தேவதா நாம் சபூதா நாம்யோ அவ்ய்ய : விதா”

பரிசுத்தமானவற்றிற்கு பரிசுத்தியை அளிப்பவன் எவனோ, எவன் மங்களமானவற்றிற்கு மங்களத்தன்மையை அளிக்கிறனோ, எவன் எல்லாப்பிராணிகளுக்கும் அழிவில்லாத தந்தையோ, அந்த ஸ்ரீமன் நாராயணணே பரபிரம்ம ஸ்வரூபி.

யதஸர்வாணி பூதா நி பவந்தியாதி யுகாகமே

யஸ் மிஞ்ச் பிரளையம் யாந்தி புனரேவ யுகச்சயேHe is the one God from whom all beings arise at the beginning of creation and who is only survives at the time of pralaya. i.e., at the end of this Universe. All the other goods are his creation only. Everything sustain at his will. He is the creater, Sustainer and destroyer of all beings. He is virat purusa. The three worlds are his Body. Theearth is his feet sky his navel. The air is his breath. The sun and the moon are his two lotus like eyes. The four side are his ears. The heaven his head. The fire is his mouth the ocean is his obdomen and all creatures. Devas Human beings:nagas,Gandharvas and Rakshas are all embedded in this body he is All-Power full.He is the source of all Vedas and all knowledge.He is enternal the entire universe is his form.” நாராயண :பரப்ரம்ஹ தத்வம் நாராயண : பர : நாராயண : பரஞ்சோதி : ஆத்மா நாராயண : பர : யச்சசித்ஜகத்யஸ்பிந்த்ருச்யதேச்ரூயதேபிவா”.

பரம்ப்ரஹ்மம் நாராயணனெ ; உயர்ந்த உண்மையான வஸ்து நாராயணனெ ; உயர்ந்த ஆத்மாவும் நாராயணனே ; இந்த உலகத்தில் காண்பனவுமான எல்லா வஸ்துக்களிளும் உள்ளும் புறமும் நுழைந்து நிறைந்திருப்பவன் நாராயணனே.

“திட விசும்பு எரிவளி நீர் நிலம் இவை மிசை

படர் பொருள் முழுவதுமாய் அவையவை தோறும்

உடல் மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்

சுடர் மிகு சுருதியுள் இவையுண்ட அரசஸே:”.

நிலம், நீர் ,தீ ,காற்று ,ஆகாயம்,எனப்படும் பஞ்ச பூதங்களாகவும் உலகிலுள்ள சகல உயிர்களிலும் எங்கும் பரந்து விளங்கும் பரம் பொருள் என, நம்மாழ்வார் எடுத்துரைத்துள்ளார்.

“இனியறிந்தேன் ஈசற்கும் , நான் முகற்க்கு தெய்வம்

இனியறிந்தேன் எம்பெருமான்!உன்னை-இனியறிந்தேன்

காரணன் நீ கற்றவை நீ , நற்கிரிசை

நாரணன் நீ நன்குணர்ந்தேன் நான்”

ஈசனுக்கு நான்முகனுக்கு தெய்வமாகிய எம்பெருமானே ;இனி நான் அறிந்துகொண்டேன்.காரணனும் நீயே,கற்றவையும் நீயே,கற்பவையும் நீயே, நற்கிரிசை நாராயணனும் நீயே என்பதை நன்கு அறிந்து கொண்டேன் என்று அழுத்தம் திருத்தமாக நாராயணனுடைய காரணத்துவத்தையும் , பரத்துவத்தையும் விளக்கியுள்ளார் பகவானின் சுதர்சன அம்சமாக அவதரித்த திருமழிசையாழ்வார். பல்லாண்டு காலம் தன் பலமனைத்தையும் கொண்டு முதலையுடன் போராடியும் மீள முடியாத நிலையில் வேறு கதியின்றி ஆதிமூலமே என்றழைத்த யானைக்கு உதவ யாரும் முன்வரவில்லை. நாராயணனாகிய ஆதிமூலப்பொருளே கருடவாகனத்தில் மீதேறி யானையின் குரலைக்கேட்டு உதவ ஓடோடியும் வந்து தனது சக்ராயுதத்தினால் யானையைக் காப்பாற்றினார். “மூலப்பேர் இட்டழைத்த மும்மதமால் யானைக்கு

நீலகிரிபோல் நின்ற நெடுமாலே”என்று

பல இடங்களில் வில்லிபுத்தூரார் மகாபாரதத்தில் நாராயணனின் பரத்வத்தை விவரித்துள்ளார்.

ஆதலின் பரப்பிரம்ம ஸ்வரூபியே ஒவ்வொரு யுகம் தோறும் தர்மத்தை நிலைநாட்டவும்,அதர்மத்தை அழிக்கவும் பல ரூபங்களாக தோன்றுகிறார்.

நாராயணனே எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஸர்வம் விஷ்ணுமயமாக பகவான் வியாபித்துள்ளார் என்பது உபநிசத்துக்களுக்கு வேதங்களும் இதிகாச புராணங்களும் கண்ட உண்மையாகும்.

ஸர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து

இப்படிக்கு
செயல் அலுவலர் ,
அருள்மிகு பண்டுரங்கர் திருக்கோவில்,
விட்டல்புரி குமாரபாளையம்.